நடிகர் சுஷாந்த் குடும்பத்தில் மீண்டுமொரு உயிரிழப்பு! அவரது இறுதிச்சடங்கின்போதே நேர்ந்த பெருந்துயரம்!
Sushanth sister im law passed away in bihar
பாலிவுட்டில் கை போ சே என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். அதனைத் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்த அவர் இந்திய கிரிக்கெட் வீரர் தல தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இந்தியளவில் பெருமளவில் பிரபலமானார்.
அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த சுஷாந்த் கடந்த சில தினங்களுக்கு முன்பு மும்பையில் பாந்த்ரா பகுதியில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் அவர் மனஅழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இவரது இந்த திடீர் மரணம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று சுஷாந்திற்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், சுஷாந்தின் உறவினரும், சகோதரரின் மனைவியுமான சுதாதேவி என்பவர் சுஷாந்தின் மரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில், மன அழுத்தத்தில் சாப்பிடாமலே இருந்துள்ளார். இந்நிலையில் ஏற்கனவே நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று மாலை பீகாரில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குடும்பத்தாரை மீளமுடியாத துயரில் ஆழ்த்தியுள்ளது.