ஆடுகளம் படத்தில் ஹீரோயினாக நடிக்க முதலில் தேர்வானது டாப்ஸி இல்லையாம்!! இவர்தானாம்!! யார் தெரியுமா அது??
நடிகை டாப்ஸி இன்று தனது 33 வது பிறந்தநாளை கொண்டாடும்நிலையில், ரசிகர்கள் மற்றும் சினிமா பிர
நடிகை டாப்ஸி இன்று தனது 33 வது பிறந்தநாளை கொண்டாடும்நிலையில், ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த ஆடுகளம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. இந்த படத்தில் டாப்ஸி ஒரு ஆங்கிலோ இந்தியன் பெண்ணாக நடித்திருப்பார். தனது முதல் படத்திலையே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தையும் பெற்றார் டாப்ஸி.
அதேநேரம் ஆடுகளம் படமும் நல்ல விமர்சனத்தை பெற்றதோடு 58 வது தேசிய திரைப்பட விருதுகளில் மொத்தம் ஆறு விருதுகளை வென்றது. இந்நிலையில் ஆடுகளம் படத்தில் முதலில் ஹீரோயினாக நடிக்க, டாப்ஸியை இயக்குனர் தேர்வு செய்யவில்லை.
'திருவிளையாடல் ஆரம்பம்' படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த ஷ்ரேயா சரண் தான் முதலில் 'ஆடுகளம்' படத்தில் நாயகியாக நடிக்க தேர்வு செய்யப்பட்டார். ஆனால் கால்ஷீட் பிரச்சனையில் ஏற்பட்ட குளறுபடியால் அவர் படத்தில் இருந்து வெளியேற, அதன்பின்னர் அந்த காதாபாத்திரத்தில் நடிகை டாப்ஸி ஒப்பந்தம் செய்யப்பட்டார்.