அட.. இது தெரியுமா? ரஜினி முருகன் படத்தில் முதலில் ஹீரோயினாக நடிக்க இருந்தது இந்த பிரபல நடிகையாம்! ஷாக்கான ரசிகர்கள்!!
அட. இது தெரியுமா? ரஜினி முருகன் படத்தில் முதலில் ஹீரோயினாக நடிக்க இருந்தது இந்த பிரபல நடிகையாம்! ஷாக்கான ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். ஆனால் இவருக்கு அடையாளமாக அமைந்து பெருமளவில் பிரபலமடைய செய்தது ரஜினிமுருகன் திரைப்படம்தான். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷின் நடிப்பு அனைவரையும் கவர்ந்து அவருக்கென ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்.
கடந்த 2015ஆம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான திரைப்படம்தான் ரஜினிமுருகன். இப்படத்தை வருத்தப்படாத வாலிபர் சங்கம் வெற்றியை தொடர்ந்து பொன்ராம் இயக்கியுள்ளார். கலகலப்பான காமெடி நிறைந்த இப்படத்தில் சூரி, ராஜ்கிரண் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மேலும் இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக, ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ஆனால் ரஜினி முருகன் திரைப்படத்தில் முதலில் ஹீரோயினாக நடிக்கவிருந்தது நடிகை தமன்னாவாம். அப்பொழுது அவரது கால்சீட் கிடைக்காத காரணத்தினால் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.