தமன்னா செய்த செயலால் இணையத்தில் லீக்காகிய ஜெயிலர் பட காட்சிகள்..!? படக்குழுவினர் அதிர்ச்சி..!
தமன்னா செய்த செயலால் இணையத்தில் லீக்காகிய ஜெயிலர் பட காட்சிகள்..!? படக்குழுவினர் அதிர்ச்சி..!
சன் பிக்சர்ஸ் தயாரித்து நெல்சன் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 169வது திரைப்படம் ஜெய்லர். கடந்த வருடம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியான நிலையில், 2022ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.
மேலும், இந்த திரைப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில், கன்னட நடிகர் சிவராஜ் குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப், தமன்னா, வசந்த் ரவி, யோகி பாபு போன்ற பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பல மொழிகளில் உள்ள முக்கிய நடிகர்கள் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது.
இந்நிலையில், அனிருத் இசையமைப்பில் உருவாகி கொண்டிருக்கும் ஜெய்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் கர்நாடகா பகுதியில் உள்ள மங்களூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன்படி, ஜெய்லர் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை தமன்னா இந்த படத்தின் படப்பிடிப்பு வேலையை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டிங்காக ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது.