ரொம்ப சவாலாக இருந்தது.! ஆனாலும்.. ஸ்வீட்டான தருணங்களை பகிர்ந்த நடிகை தமன்னா!!
ரொம்ப சவாலாக இருந்தது.! ஆனாலும்.. ஸ்வீட்டான தருணங்களை பகிர்ந்த நடிகை தமன்னா!!
2014 ஆம் ஆண்டு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டான திரைப்படம் அரண்மனை. இதன் வெற்றியை தொடர்ந்து சுந்தர் சி அரண்மனை 2, அரண்மனை 3 என தொடர்ந்து திரில்லர் ஜானரில் படங்களை எடுத்து வருகிறார். அந்த படங்களும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் சுந்தர் சி தற்போது அரண்மனை 4 திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தில் சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா, யோகிபாபு, கோவை சரளா, சிங்கம்புலி, ஜே பி, விச்சு, விடிவி கணேஷ், டெல்லி கணேஷ், கேஜிஎஃப் ராம், சந்தோஷ் பிரதாப், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். இதன் டிரைலர் அண்மையில் வெளிவந்தது. மேலும் படம் ஏப்ரல் 26-ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் சில காரணங்களால் மே 3 வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரண்மனை 4 திரைப்படத்தில் நடிகை தமன்னா முக்கிய ரோலில் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ போன்றவற்றை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அதில் அவர், அரண்மனை 4 அலறல்கள் மற்றும் பயமுறுத்தல்களுக்கு பின்னால் உள்ள சில இனிமையான தருணங்கள். இந்தப் படத்தில் நடித்தது மிகவும் சவாலாக இருந்தது. ஆனாலும் வேடிக்கையாக இருந்தது. உண்மையில் இந்த படத்தில் அனைத்து ஸ்டண்ட்களையும் நானே செய்தேன். இந்த டீமில் நானும் ஒரு பகுதியாக இருந்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்துள்ளார்.