நடிகர் மோகன் பற்றி யாரும் அறியாதா பல சுவாரசியமான உண்மைகள்!
Tamil actor mohan life history and his achievements
தமிழ் சினிமாவில் இன்றை சூழ்நிலையில் ஒரு திரைப்படம் திரையரங்குகளில் வெளிவருவதே சிரமமாக உள்ளது. அப்படி பல தடைகளை தாண்டி அப்படம் 10-நாட்கள் ஓடினாலே வெற்றிவிழா கொண்டாடப்படும் நிலை உள்ளது.
ஆனால் 25-ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் சினிமாவில் பெரும்பாலான படங்கள் 100-நாட்கள், 200-நாட்கள் என சா்வ சாதாரணமாக ஓடும். இப்படி பல திரைப்படங்கள் நிறைய நாட்கள் ஓடி சாதனை படைத்துள்ளன.
இதுபோன்ற ஒரு சாதனையை தனது முதல் படத்திலேயே படைத்த பிரபல இயக்குநா் சுந்தா்ராஜ் அவா்களின் பயணங்கள் முடிவதில்லை படத்தில் நடித்த பிரபல நடிகா் மோகன் அவா்களை பற்றி பாா்ப்போம்.
இயக்குநா் சுந்தா்ராஜ் அவா்களுக்கு மோகன் நடித்து 1982-ம் ஆண்டு வெளிவந்த பயணங்கள் முடிவதில்லை திரைப்படமே முதல் படமாகும். இப்படம் மாபெரும் வெற்றிபெற முக்கிய காரணங்களுள் ஒன்று இளையராஜாவின் இசையாகும். இவரது இசையில் படத்தின் அனைத்து பாடல்களும் மிகப்பெரும் ஹிட் அடித்தது.
மேலும் இப்படம் நடிகா் மோகன் அவா்களின் திரைபயணத்தில் 300-நாட்களை கடந்த மூன்றாவது திரைப்படமாகும். இதற்கு முன்பு மோகன் நடிப்பில் நெஞ்சத்தைகிள்ளாதே, கிளிஞ்சல்கள் ஆகிய படங்கள் 300-நாட்கள் ஓடியது என்பது குறிப்பிடதக்கது.
ஹீரோவாக அறிமுகமாகி முதல் மூன்று வருடங்களிலும் 300 நாட்கள் ஓடி சாதனை படைத்த மூன்று படங்களைக் கொடுத்த ஒரே ஹீரோ மோகன் மட்டுமே. ‘பயணங்கள் முடிவதில்லை’ படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஃபிலிம் ஃபேர் விருதையும் வென்று சாதித்தார் மோகன். அவர் வாங்கிய ஒரே பெரிய விருதும் இதுமட்டுமே என்கிறார்கள்.