பழம்பெரும் நடிகர், வில்லுப்பாட்டு நாயகன், கவிஞர் சுப்பு ஆறுமுகம் காலமானார்.! சோகத்தில் திரையுலகம்.!
பழம்பெரும் நடிகர், வில்லுப்பாட்டு நாயகன், கவிஞர் சுப்பு ஆறுமுகம் காலமானார்.! சோகத்தில் திரையுலகம்.!
தமிழில் புகழ்பெற்ற இசைக்கலைஞராக இருப்பவர் சுப்பு ஆறுமுகம் (வயது 93). இவர் நெல்லை மாவட்டத்தில் உள்ள சந்திரபுகுளத்தில் பிறந்து, 14 வயதில் குமரன் பாட்டு கவிதை தொகுப்பின் மூலம் பிரபலமடைந்தார்.
இது மட்டுமல்லாமல் என்எஸ் கிருஷ்ணனின் 19 படங்கள், நாகேஷின் 60 படங்களுக்கு நகைச்சுவை பதிவுகளையும் எழுதி உள்ளார். இதனை தொடர்ந்து கல்கி எழுதிய காந்தியின் சுயசரிதையை வில்லுப்பாட்டாக பாடியுள்ளார்.
உத்தம வில்லன் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், கடந்த 2021-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதுகளை பெற்றார். இந்நிலையில் வயது முதிர்வால் சென்னையில் இன்று சுப்பு ஆறுமுகம் காலமடைந்தார். இதனால் திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.