அட.. நம்ம தாஸ் பட நடிகையை நியாபகம் இருக்கா?.. இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..! வைரலாகும் குடும்ப புகைப்படம்..!!
அட.. நம்ம தாஸ் பட நடிகையை நியாபகம் இருக்கா?.. இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..! வைரலாகும் குடும்ப புகைப்படம்..!!
தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் இருந்தாலும் 90sகளில் பலரின் மனதை கொள்ளை கொண்டவர்கள் தற்போது பெரும்பாலும் நடிப்பதில்லை. தமிழில் ஜெயம் ரவி மற்றும் ஆர்யாவுடன் பல படங்களில் நடித்தவர் ரேணுகா மேனன்.
இவர் பரத் நடிப்பில் வெளியான பிப்ரவரி 14 திரைப்படம் மூலமாக திரைத்துறைக்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து கலாபக்காதலன், தாஸ் உட்பட பல தமிழ் படங்களிலும், மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.
கடந்த 2006 ஆம் ஆண்டு அமெரிக்காவில் மென்பொருள் என்ஜினீயராக பணியாற்றி வந்த சுராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.
திருமணத்திற்கு பின்னர் நடிப்பை நிறுத்திய அவர் அமெரிக்காவில் குடியேறி அங்கு நடனப்பள்ளியை நடத்தி வருகிறார். தற்போது அவர் தனது குடும்பத்துடன் எடுத்துள்ள புகைப்படமானது வெளியாகி வைரலாகி வருகிறது.