முரளி முதல் சேதுராம் வரை..! தமிழ் சினிமாவை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஐந்து நம்பமுடியாத மரணங்கள்.!
Tamil cinema sudden deaths from murali to sethuram
தமிழ் சினிமாவில் ஒருசில பிரபலங்களின் திடீர் மரணம் இன்றுவரை ஏற்றுகொள்ளமுடியாத, மறக்க முடியாத தருணங்களில் ஒன்றாக உள்ளது. நேற்று முன்தினம் இறந்த நடிகர் சேதுராமில் இருந்து 10 வருடங்களுக்கு முன்பு இறந்த முரளி வரை தமிழ் சினிமா பல பிரபலங்களின் திடீர் மரணத்தை சந்தித்துள்ளது.
1 . சேதுராம் - 2020 :
கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படம் மூலம் 2013 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான இவர் நேற்று முன்தினம் இரவு 8 . 30 மணியளவில் ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் தனது 36 வயதில் உயிர் இழந்தார்.
2 . JK ரித்தீஷ் - 2019 :
அரசியல்வாதியும், நடிகருமான JK ரித்தீஷ், கடந்த ஆண்டு தனது சொந்த ஊரான ராமநாதபுரத்தில் மாரடைப்பு காரணமாக உயிர் இழந்தார். 46 வயதான நடிகர் ரிதீஷின் திடீர் மாரடைப்பு மரணம் இன்று வரை நம்பமுடியாத சோக கதையாக உள்ளது. கடைசியாக LKG என்ற படத்தில் நடித்திருந்தார் JK ரித்தீஷ்.
3 . ஸ்ரீதேவி - 2018 :
தமிழ், ஹிந்தி என இந்திய சினிமாவின் அடையாளமாக விளங்கிய நடிகை ஸ்ரீதேவி, துபாயில் நடந்த திருமண விழா ஒன்றுக்கா சென்றிருந்தபோது தான் தங்கியிருந்த ஹோட்டல் அறையின் நீச்சல் தொட்டியில் உயிரிழந்து மீட்கப்பட்டார். தனது 54 வயதில் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் மரணம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
4 . நா. முத்துக்குமார் - 2016 :
பல்வேறு விருதுகள், தேசிய விருதுகள் வாங்கிய பாடலாசிரியர், கவிஞர் நா. முத்துக்குமாரின் திடீர் மரணம் தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரிய இழப்பு என்றே கூறலாம். மஞ்சள் காமாலை காரணமாக தனது 41 வயதில் கடந்த 2016 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார் பாடலாசிரியர் நா. முத்துக்குமார்.
5 . முரளி - 2010 :
90s கிட்ஸ்ன் விருப்பமான நடிகர்களில் ஒருவர் முரளி. பல்வேறு திரைப்படங்களில் நடித்த இவர் முன்னணி தமிழ் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர். கடந்த 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி அதிகாலையில் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
ஆனால், மருத்துவமனைக்கு சேர்வதற்கு முன்னதாகவே நடிகர் முரளி மாரடைப்பால் மரணமடைந்தார். முரளி இறக்கும்போது அவரது வயது 46.