சிம்பு தொடர்ந்த வழக்கில் விஷாலுக்கு நோட்டீஸ்; என்னதான் நடக்கிறது திரையுலகில்.!
tamil cinima - simpu - actor vishal - high court
தன்னுடைய பட விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சிம்பு வழக்கு தொடர்ந்ததை அடுத்து நடிகர் விஷால் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
சிறுவயது முதலே நடனம், நடிப்பு என தனது திறமையால் எட்ட முடியாத உயரத்திற்கு வளர்ந்தவர் நடிகர் சிம்பு. ஒரு சில காரணங்களால் கடந்த சில வருடங்களாக பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் தவித்து வந்த சிம்புவுக்கு இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான செக்க சிவந்த வானம் மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கியது. STR இஸ் கம் பேக் என்றே சொல்லலாம்.
இந்நிலையில் தன்னுடைய அன்பானவன் அடங்காதவன் அசராதவன் பட விவகாரத்தில் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தன்னை பற்றி அவதூறு பரப்பியதாகவும் இதற்கு தயாரிப்பாளர் சங்கம் கட்டப்பஞ்சாயத்து செய்வதாகவும் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
மேலும் தயாரிப்பாளர் ஒரு கோடி மான நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம் மைகேல் ராயப்பன் மற்றும் நடிகர் விஷால் ஜனவரி 18ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.