தவிக்கும் மக்கள்! உதவிக்கரம் நீட்டிய தமிழ் பிரபலங்கள்! என்ன செஞ்சாங்க தெரியுமா?
Tamil famous actors vijay sethupathi and dhanush helped to kerala people
கேரளாவில் கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் கேரளா மக்கள் படும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். பலரதும் தங்களது உடமைகளை இழந்து உன்ன உணவில்லாமல், உறங்க இடம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கனமழையால் அம்மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி முழு கொள்ளளவை எட்டியதால் பல அணைகளின் மதகுகள் திறந்துவிடப்பட்டுள்ளன. இதனால், கேரள மாநிலம் முழுவதும் வெள்ளக்காடானது.
கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு பல சாலைகள் நீரில் அடித்து சென்று விட்டது. இதனால் கேரளாவில் போக்குவரத்துக்கு முற்றிலும் முடங்கியுள்ள நிலையில் உடமைகளை இழந்த பல மக்கள் வெல்ல நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், முதல்வர் நிவாரண நிதிக்கு உதவித்தொகைக்கு, தமிழக முதல்வர் மற்றும் பல அரசியல்வாதிகள், நடிகர்கள் சூர்யா, கார்த்தி ரூ. 25 லட்சமும், நடிகர் கமல்ஹாசன் ரூ. 25 லட்சமும், நடிகர் அல்லு அர்ஜூன் ரூ. 25 லட்சமும், நடிகர்கள் சங்கம் ரூ. 5 லட்சமும், நடிகர் விஷால் ரூ. 10 லட்சமும், சிவகார்த்திகேயன் ரூ. 10 லட்சமும், நடிகை ஸ்ரீ ப்ரியா ரூ. 10 லட்சமும், நடிகர் சித்தார்த் ரூ. 10 லட்சமும், நடிகை ரோகிணி ரூ. 2 லட்சம் வழங்கியுள்ளனர்.
மேலும், நடிகர் தனுஷ் ரூ. 15 லட்சமும், நடிகர் விஜய்சேதுபதி 25 லட்சம் நிவாரண நிதி வழங்கியுள்ளனர். நடிகர்களில் அதிகமான தொகை ரூ. 1 கோடியை நடிகர் பிரபாஸ் வழங்கியுள்ளனர்.