2020 ஆம் ஆண்டிற்கான தேசிய விருதுகள்.! 10 விருதுகளை தட்டி தூக்கிய தமிழ்படங்கள்.! முழுவிவரம் இதோ!!
2020 ஆம் ஆண்டிற்கான தேசிய விருதுகள்.! 10 விருதுகளை தட்டி தூக்கிய தமிழ்படங்கள்.! முழுவிவரம் இதோ!!
இந்திய சினிமாதுறையில் மதிப்புமிக்க விருதுகளில் ஒன்றாக கருதப்படுவது
தேசிய திரைப்பட விருதுகள். இந்த விருது சிறந்த நடிகர்கள், நடிகைகள், திரைப்படங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு அவர்களது திறமையை பெருமைபடுத்தும் வகையில் வழங்கப்படும். இந்நிலையில் 2020-ம் ஆண்டு வெளிவந்த படங்களுக்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது.
அதில் தமிழ் திரைப்படங்களுக்கு 10 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சுதா கொங்கரா இயக்கத்தில் வெளிவந்து ஹிட்டான சூரரைப் போற்று திரைப்படம் 5 விருதுகளை வென்றுள்ளது. அதாவது சிறந்த படம் சூரரை போற்று, சிறந்த நடிகருக்கான விருதை சூர்யா, சிறந்த நடிகைக்கான விருதை அபர்ணா பாலமுரளி, சிறந்த இசையமைப்பாளர் விருதை ஜிவி பிரகாஷ் மற்றும் சிறந்த திரைக்கதைக்கான விருதை சுதா கொங்கரா ஆகியோர் பெற்றுள்ளனர்.
இயக்குனர் வசந்த் சாய் இயக்கிய சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படம், மொழிவாரியாக தேர்வு செய்யப்பட்ட படங்களில் சிறந்த தமிழ் படம் என்ற விருதை பெற்றுள்ளது. மேலும் சிறந்த எடிட்டருக்கான விருதை ஸ்ரீகர் பிரசாத், சிறந்த துணை நடிகைக்கான விருதை லட்சுமிபிரியா சந்திரமவுலி ஆகியோர் பெற்றுள்ளனர்.
தொடர்ந்து யோகி பாபு நடிப்பில் வெளிவந்த மண்டேலா திரைப்படத்திற்காக சிறந்த வசனம் மற்றும் அறிமுக இயக்குனருக்கான விருதுகளுக்காக மடோன் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.