×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிவாரணம்.! தமிழக முதல்வர் அறிவிப்பு!!

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிவாரணம்.! தமிழக முதல்வர் அறிவிப்பு!!

Advertisement

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 35க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 70க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணம் அறிவித்து தமிழக முதல்வர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்பு 

கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டம், கருணாபுரம் காலனியில் மெத்தனால் கலந்த சாராயம் அருந்தியதால் 34 நபர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியைக் கேட்டு மிகவும் வேதனையும், அதிர்ச்சியும் அடைந்தேன். இச்சம்பவத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளித்திட அறிவுறுத்தியுள்ளதோடு, பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் திரு எ.வ.வேலு மற்றும் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு மா.சுப்பிரமணியன் அவர்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: அரசு நிர்வாகத்தின் அலட்சியம்.! கள்ளக்குறிச்சி விவகாரம்.! நடிகர் விஜய் கண்டனம்!!

இதைத் தொடர்ந்து, மீண்டும் இன்று அவர்களுடன் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்களும் கள்ளக்குறிச்சிக்கு சென்றுள்ளார். இதுவரை இச்சம்பவத்தில் விஷச்சாராய விற்பனையில் தொடர்புடைய நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இதில் தீவிர விசாரணை மேற்கொண்டு, குறிப்பாக விஷச்சாராயம் தயாரிக்க மெத்தனாலை வழங்கியவர்களையும் கண்டறிந்து, அவர்கள் மீதும் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிவாரணம் 

இச்சம்பவம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட காவல் துறை அலுவலர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களும் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார். மேலும் இதுகுறித்து தீர விசாரிக்கவும், உரிய மேல்நடவடிக்கை எடுக்கும் பொருட்டும் இவ்வழக்கு CBCID வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா பத்து இலட்சம் ரூபாயும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: #JustIN: 38 பேரின் உயிரை பறித்துக்கொண்ட கள்ளச்சாராயம்; அரசை கடுமையாக கண்டிக்கும் இயக்குனர் பா. ரஞ்சித்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#cheif minister #Poison liquor #kallakuruchi
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story