கொளுகொளுவென இருந்த டாப்ஸி எப்புடி ஆயிட்டாங்க பாருங்க! வைரலாகும் புகைப்படம்
Tapsee old look in sand ki aankh
தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் என்ற படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை டாப்ஸி. ஆடுகளம் படம் தமிழ் சினிமாவில் இவருக்கு மிகப்பெரிய இடத்தை பெற்று தந்தது. ஆடுகளம் படத்தை அடுத்து வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா போன்ற படங்களில் நடித்தார் டாப்ஸி.
காஞ்சனா படமும் இவரது சினிமா பயணத்தில் வெற்றிப்படமாக அமைந்தது. தமிழ் மட்டும் அல்லாது தெலுங்கு, ஹிந்தி சினிமாவிலும் நடித்து அங்கும் பிரபலமானார் நடிகை டாப்ஸி.
இவர் தற்போது ஷான்ட் கி அன்ங் என்ற உண்மை வரலாற்று திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படமானது பிரபல துப்பாக்கி சுடும் பெண்களான சந்த்ரோ மற்றும் ப்ராக்சி தோமரின் வாழ்க்கையை மையப்படுத்தியது.
இந்த படத்தில் அவர்களின் உண்மை கதாப்பாத்திரத்தை அப்படியே வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக டாப்ஸி வயது முதிர்ந்த கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். அந்த பட்த்தின் புகைப்படங்கள் சிலவற்றை டாப்ஸி வெளியிட்டுள்ளார். இதில் உண்மையிலேயே டாப்ஸி வயதானவர் போல் தோன்றுகிறார்.