விஜய் தேவரகொண்டாவின் அடுத்த படம்; மாஸ் அப்டேட்டால் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
விஜய் தேவரகொண்டாவின் அடுத்த படம்; மாஸ் அப்டேட்டால் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் தேவரகொண்டா. மொழிகளை கடந்து பெண் ரசிகர்களை அதிகம் கொண்ட விஜய் தேவரகொண்டா, இறுதியாக நடித்த தி பேமிலி ஸ்டார் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது ஸ்ரீ வெங்கடேஸ்வரா பிலிம்ஸ் நிறுவனம் விஜய் தேவரக்கொண்டவுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் பணியாற்ற இருக்கிறது. இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் மே 9 ம் தேதி அன்று வெளியாகிறது.
பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பும் வகையில் கிராமத்து ஆக்சன் காட்சிகளுடன் உருவாக திட்டமிடப்பட்டுள்ள இப்படத்தின் இயக்குனராக ரவி கிரண் கோலா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அடுத்தடுத்த பல அப்டேட்கள் 09 ம் தேதியில் வெளியாகவிருக்கிறது.
இந்த அப்டேட்டை சற்றும் எதிர்பாராத ரசிகர்கள் கொண்டாட்டத்தில் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.