தமிழர்களின் வரலாற்றை கொச்சைப்படுத்தும் தெலுங்கு ரசிகர்கள்.. சோழர்களுக்காக ஒன்று திரண்டு மரணமாஸ் சம்பவத்தில் தமிழர்கள்..!!
தமிழர்களின் வரலாற்றை கொச்சைப்படுத்தும் தெலுங்கு ரசிகர்கள்.. சோழர்களுக்காக ஒன்று திரண்டு மரணமாஸ் சம்பவத்தில் தமிழர்கள்..!!
கல்கி எழுதிய நாவலை தழுவி, இயக்குனர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட திரைப்படம் பொன்னியின் செல்வன். இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்று கூறியிருந்த நிலையில், பொன்னியின் செல்வன் முதல் பாகம் இன்று பிரம்மாண்டமாக திரையிடப்பட்டது.
இப்படத்தில் நடிகர்கள் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்திக், ஜெயராம், பார்த்திபன், பிரகாஷ் ராஜ் மற்றும் நடிகைகள் ஐஸ்வர்யாராய், ஐஸ்வர்யா லட்சுமி, திரிஷா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளிலும் நேரடியாக வெளியிடப்பட்டது.
அத்துடன் படம் வெளியாக முன்பே படத்தின் ப்ரோமோ மற்றும் பாடல் காட்சிகள் அதிரடியாக வெளியிடப்பட்டு அனைவரது மனதையும் கவர்ந்தது. இன்று பிரம்மாண்டமாக திரையிடப்பட்ட பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்த்துவிட்டு தமிழ்ரசிகர்கள் பலரும் தங்களது மனப்பூர்வமான கருத்துக்களை தெரிவித்தனர்.
அத்துடன் சிலர் பெங்களூரு போன்ற பல மாநிலங்களில் இருந்தும் சென்னை வந்து படத்தை கண்டு மகிழ்ந்தனர். இந்நிலையில் சில தெலுங்கு ஆடியன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பொன்னியின் செல்வனை பாகுபலியோடு ஒப்பிட்டு ட்ரோல் செய்து ட்வீட் செய்து வருகின்றனர். அதில் சிலர் "பாகுபலியை வைத்துதான் பொன்னியின் செல்வனை எடுத்ததாக கூறியுள்ளனர்.
சிலர் பாகுபலியை காப்பியடித்துவிட்டதாகவும், சிலர் ஆயிரம் தான் இருந்தாலும் ராஜமவுலி போல் வருமா? இயக்குனர் மணிரத்தினம் வேஸ்ட்" என்பது போல ட்ரோல் செய்து ட்வீட் செய்துள்ளனர். இதனைக் கண்டு பொங்கியெழுந்த தமிழ் ரசிகர்கள் அதனை தங்களது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து "பொன்னியின் செல்வனுக்கும், பாகுபலிக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது.
பாகுபலி ஒரு கற்பனை கதை. ஆனால் பொன்னியின் செல்வன் தமிழரின் வரலாற்று கதை என்று கூறி வருகின்றனர். அத்துடன் அவர்கள் ட்ரோல் செய்ததை கண்டு கோபமுற்ற சிலர், காதால் கேட்க முடியாத வார்த்தைகளால் கழுவி ஊற்றி பொன்னியின் செல்வன் கதையை படித்துதான் பாகுபலியே எடுத்துள்ளார்கள் முட்டாள்களே" என்று பதிலளித்து ட்வீட் செய்துள்ளனர்.