காதலித்து ஏமாற்றிவிட்டார்.. பிரபல நடிகை அதிர்ச்சி புகார்! அதிரடியாக கைது செய்யபட்ட பிரபல ஒளிப்பதிவாளர்!
Telungu heroine complaint on cinematographer
தெலுங்கு சினிமாவில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளிவந்து மாபெரும் ஹிட் கொடுத்த அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தில் தோழி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் சாய்சுதா. இவர் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் அவர் மகேஷ் பாபுவின் போக்கிரி, பிசினஸ்மேன் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளிவந்த டெம்பர் படங்களின் ஒளிப்பதிவாளர் ஷ்யாம் கே.நாயுடு மீது திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னை ஏமாற்றி விட்டதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில் அவர், ஷ்யாம் கே.நாயுடு தன்னை கட்டாயப்படுத்தி காதலித்து வந்தார். பின்னர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கடந்த 7 ஆண்டுகளாக நெருங்கி பழகிவிட்டு, ஏமாற்றிவிட்டார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரை தொடர்ந்து போலீசார் கே.நாயுடு மீது வழக்குபதிவு செய்து கைது செய்துள்ளனர்.
ஷ்யாம் கே.நாயுடுவிற்கு கடந்த 2017ம் ஆண்டு ஹைதராபாத்தில் போதைப்பொருள் வழக்கில் சிக்கிய நபருடன் தொடர்புடையதாக தகவல்கள் வெளிவந்து பெரும் பரபரப்பை கிளப்பியது. இந்நிலையில் தற்போது ஷ்யாம் கே.நாயுடு கைது செய்யப்பட்டுள்ளது தெலுங்கு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.