×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பிரபல இளம் நடிகை தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்! நடந்தது என்ன? முழு விவரம்!

Telungu tv actress jansi death case

Advertisement

சினிமா பிரபலங்கள் தற்கொலை செய்துகொள்வது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் தெலுங்கு திரையுலகில், பிரபல தொலைக்காட்சி நடிகையாக இருந்த ஜான்சி என்ற இளம் நடிகை சில நாட்களுக்கு மும்பு தற்கொலை செய்துகொண்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தற்போது அவரது தற்கொலைக்கு காரணம் அவரது காதலர் சூர்யாதான் என செய்திகள் வெளியாகியுள்ளது. நடிகை ஜான்சி பயன்படுத்திய தொலைபேசிகளை ஆராய்ந்ததில் அவர் அவரது காதலர் சூர்யாவிடம் தான் அதிகம் பேசியுள்ளதாக தெரிகிறது. இதனால் சூர்யாவை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த விசாரணையில் சூர்யா கூறிய தகவல்கள், தனக்கு ஜான்சியை கடந்த 10 மாதங்களாக மட்டுமே தெரியும். இருவரும் மனம் ஒத்துப் போனதால் காதலித்தோம். ஜான்சி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியதற்கு,  தன்னுடைய தங்கை திருமணம் முடிந்து காதலைப் பற்றி வீட்டில் சொல்வதாக கூறினேன்.

மேலும் ஏற்கனவே, ஜான்சியை தன்னுடைய தாயாரிடம் தோழி என அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் கூறினார்.  மேலும் என் தாயார் எனக்கு பெண் பார்ப்பதாக ஜான்சியிடம் கூறியதால், அவர் அதைப் பற்றியே யோசித்து மனமுடைந்து காணப்பட்டார்.  அவருக்கு நான் ஆறு நாட்களுக்கு முன்பு போன் செய்த போது அவர் என்னுடைய போன் கால்லை எடுக்கவில்லை.

பின்னர் வேலையில் நான் மும்முரமாக இருந்ததால்,  ஜான்சியின் போனை என்னால் எடுக்க முடியவில்லை. எனக்கு பல முறை முயற்சித்தும் போனை எடுக்காததால்,  அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறியுள்ளார். அதேபோல் நான் ஜான்சியை ஏமாற்றவில்லை என்றும் சூர்யா கூறியுள்ளார்.

ஆனால் நடிகை ஜான்சியின் பெற்றோர் தங்கள் மகள் ஜான்சியின் இறப்புக்கு சூர்யாதான் முழு காரணம் என்றும், எனது மகளை ஏமாற்றி அவர் நிறைய பணம் வாங்கியுள்ளதாகவும் புகார் அளித்துள்ளனர்.

அவர்களது புகாரின் பேரில் போலீசார் சூர்யாவை இபிகோ 306 மற்றும் 417 பிரிவின் கீழ் கைது செய்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#jansi #Seriyal actres death
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story