தல ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்ட விக்னேஷ் சிவன்; ஏன் தெரியுமா?
thala ajith birth day - wisheses fans and vignesh shivan
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தல அஜித். இவருக்கென ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். விஸ்வாசம் படத்தை தொடர்ந்து தல அஜித் தனது 59 வது படத்தில் நடித்துள்ளார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தை சதுரங்க வேட்டை, தீரன் போன்ற படங்களை இயக்கிய வினோத் இயக்கியுள்ளார்.
மேலும், இந்த படத்தில் இந்தி நடிகை வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆத்விக் ரவிச்சந்திரன் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பாலிவுட் சினிமாவில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வெற்றியை பெற்ற படம் 'பிங்க்'. இந்த படத்தின் தமிழ் ரீமேக்கான 'நேர்கொண்ட பார்வை' தல 59 படமாக உருவாகி உள்ளது.
இந்நிலையில் மே 1ஆம் தேதி வரும் தல அஜித்தின் பிறந்த நாளை அஜித் ரசிகர்கள் மிக பிரமாண்டமாக கொண்டாட தயாராகி வருகின்றனர். அவரின் பிறந்த நாளில் ரசிகர்கள் டுவிட்டரில் டிரெண்ட் செய்யும் விதமாக #THALABDayFestivalCDP என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கியதோடு, ரசிகர்கள் தங்களின் டுவிட்டர் புகைப்படத்தை மாற்றி வருகின்றனர்.
அந்த வகையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது டுவிட்டரில், “இணையதள வசதி இல்லாத இடத்தில் மாட்டிக்கொண்டேன், மன்னித்துவிடுங்கள் நண்பர்களே. பிறந்தநாள் வாழ்த்துகள் தல. உலகெங்கும் இருக்கும் தல ரசிகர்களுக்கு திருவிழா வாழ்த்துகள்’ என்று பதிவிட்டுள்ளார்.