லைட்மேன் மடியில் தலைவைத்து தூங்கிய தல அஜித்! பிக்பாஸ் விஜயலக்ஷ்மி வெளியிட்ட சுவாரசிய தகவல்!
Thala ajith slept on light man lap at shooting spot
தமிழ் சினிமாவின் அடையாளம் தல அஜித். எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தனது சொந்த முயற்சியால் இந்த அளவிற்கு உயர்ந்துள்ளார் நடிகர் அஜித். அஜித் எந்த அளவிற்கு பிரபலமானவரோ அதே அளவிற்கு மிகவும் பொறுமையானவரும் கூட. அனைவரிடமும் மிகவும் அன்பாகவும், பாசத்துடனும் பழக்க கூடியவர்.
இந்நிலையில் நடிகர் அஜித் பற்றி ஒரு பேட்டியில் கூறியுள்ளார் சென்னை-28 நாயகி விஜயலக்ஷ்மி. இவர் பிரபல சினிமா இயக்குனர் அகத்தியனின் மகள் ஆவார். விஜயலக்ஷ்மி பேசுகையில், ‘வான்மதி’, `காதல் கோட்டை’ படங்கள் அப்பா இயக்கியது. அப்போ, அப்பா எங்களை ஷூட்டிங் ஸ்பாட்டுக்குக் கூட்டிக்கிட்டுப் போவார். அப்போ, அஜித் சாரை பார்த்து பிரமிச்சுப் போயிருக்கேன்.
ஷூட்டிங் டைம்ல நல்லா பேசுவார். சிலசமயம் அங்கே இருக்கிற லைட் மேன் மடியில படுத்துத் தூங்குவார். அவர்கூட ஒருநாள் 4 மணிநேரம் பிரியாணி சாப்பிட்டுக்கிட்டே பேசுனதை மறக்கவே முடியாது. ரொம்ப ஃப்ரெண்ட்லியான நபர் அஜித் சார் என்று புகழந்துள்ளார் நடிகை விஜயலக்ஷ்மி.