இன்று பிறந்தநாள் காணும் தல அஜித்தின் மகன் ஆத்விக்; ரசிகர்கள் உற்சாகம்.!
thala ajith son aathvick bithday celepration today
தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளது. மேலும் பிரபலமான நடிகர், நடிகைகள் பலரும் அஜித்தின் பரம ரசிகர்களாக உள்ளனர். மேலும் இவரோடு இணைந்து நடிப்பதை மாபெரும் கனவாகவும் வைத்துள்ளனர்.
இவருக்கும் நடிகை ஷாலினிக்கும் காதல் மலர்ந்து கடந்த 2000ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து 2008 ஆம் ஆண்டு அனோஷ்கா என்ற பெண் குழந்தையும் அதன்பிறகு 2015ஆம் ஆண்டு ஆத்விக் என்ற ஆண் குழந்தையும் பிறந்தது.
இந்நிலையில் இன்று பிறந்த நாள் காணும் ஆத்விக் நான்கு ஆண்டுகள் முடிந்து ஐந்தாம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறார். தனது பிறந்த நாளையே ஆடம்பரமாக கொண்டாடதவர் அஜித். இந்த நிலையில் தனது மகனின் முதல் பிறந்த நாளை மட்டும் தனது உறவினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் வாட்டாரத்தில் கொண்டாடினார்.
டுவிட்டரில் அஜித்தின் ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். குட்டி தல, ராயல் பேபி என்று வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இன்று காலையில் இருந்தே டுவிட்டரில் #AadvikAjith #KuttyThala #HBDAadvikAjith ஆகியவை டிரண்ட் ஆகி வருகிறது.