தல ரேஸ் ஓட்டி பார்த்திருப்பீர்கள், டையர் ஓட்டி பார்த்துள்ளீர்களா.! வைரலாகும் வீடியோ.
Thala did dayar race

தமிழ் சினிமாவில் எந்த வித சிபாரிசும் இன்றி தனது சொந்த உழைப்பால் புகழின் உச்சிக்கு சென்றவர் தான் தல அஜித். இவருக்கென தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரின் பிறந்த நாள் மற்றும் படங்களை ரசிகர்கள் விழா போல கொண்டாடுவர்கள்.
அதேபோல் தான் இன்று தல அஜித் பிறந்தநாளை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். மேலும் விஜய் ரசிகர்களும் தல அஜித்துக்கு வாழ்த்து கூறி இந்திய அளவில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
இந்நிலையில் தல அஜித் நடிப்பை தாண்டி கார், பைக் ரேஸில் மிகுந்த ஆர்வம் உடையவர் என்பது அனைவருக்கும் தெரியும். அதுமட்டுமின்றி தல அஜித் ரேஸ் ஓட்டியதை கூட பார்த்திருப்போம். ஆனால் யாரும் அவர் டையர் ஓட்டியதை பார்த்திருக்க மாட்டார்கள். அவர் டையர் ஓட்டிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.