தளபதி 63 ஸ்பெஷல் தகவலை வெளியிட்ட முக்கிய பிரபலம்! உற்சாக குழப்பத்தில் தளபதி ரசிகர்கள்!!
thalapathi 63 update by vivek
தமிழில் பல வெற்றிப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவருக்கென இந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.மேலும் இவரது படம் வெளியாகும் நாட்கள் மற்றும் இவரது பிறந்தநாளை கோலாகலமாக திருவிழாவை போல கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் விஜய் அட்லீயுடன் மூன்றாவது முறையாக கூட்டணியில் இணைந்து விஜய் 63 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்த படம் விளையாட்டை மையமாக கொண்டு உருவாகி வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் நடிகர்கள் கதிர், ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, யோகி பாபு, விவேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்புகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் விஜய் 63 படத்தின் தலைப்பு என்ன, பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்பொழுது வெளியாகும் என ரசிகர்கள் பெருமளவில் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் விஜய்யின் ஆஸ்தான பாடலாசிரியர் விவேக் தளபதி ரசிகர்களுக்காக என 30 என்ற புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இதற்கு, வரும் ஜூன் 22ம் தேதி விஜய் தனது 45ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். எனவே அதனை முன்னிட்டு தளபதி 63 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்பதையே பாடலாசிரியர் விவேக் தெரிவித்துள்ளதாக விஜய் ரசிகர்கள் கூறிவருகின்றனர்.