விஜய்யின் தளபதி#63 கதை வெளியாகிவிட்டதா! அதிர்ச்சியில் படக்குழுவினர்
Thalapathy 63 story leaked or not

சர்க்கார் படத்தை தொடர்ந்து இயக்குனர் அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்து தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார் விஜய். தளபதி 63 படம் விளையாட்டை மையமாக கொண்ட படம் என்பதால் விஜய் ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.
இந்நிலையில் இந்த படத்தின் கதை வெளியாகிவிட்டதா என்ற அதிர்ச்சியில் படக்குழுவினர் இருந்து வருகின்றனர். இந்த படத்தில் விஜய் இந்திய கால்பந்து அணிக்கு பயிற்சியாளராக இருப்பதும், பல்வேறு கடினமான பயிற்சிகளுக்கு பிறகும் அவர்கள் அணி தோல்வியுறுவதும், மேலும் அணி வீரர்கள் மர்மமான முறையில் கொல்லப்படுவதும் என கதை துவங்குகிறதாம்.
இதில் திடீரென விஜய் தான் இந்த கொலைகளுக்கு காரணம் என அவரை போலீஸ் கைதுசெய்வதும், ஒன்றும் தெரியாத விஜய் எப்படி உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து இதிலிருந்து தப்புகிறார் என்பதும் தான் மீதி கதையாம்.
இந்த கதை இப்போது பரவி வரும் நிலையில் இதுதான் உண்மையில் அட்லி, வஜய்க்காக எழுதிய கதை இதுதானா என்பது உறுதியாகவில்லை. ஒருவேளை இதுதான் உண்மையெனில் கதை மாற்றியமைக்கப்படுமா என எதிர்பார்க்கப்படுகிறது.