சூப்பர் ஸ்டாருக்கு பதிலடி கொடுக்க தயாராகும் தளபதி... லியோ ஆடியோ வெளியீட்டில் கலந்து கொள்வாரா சூப்பர் ஸ்டார்.?.!
சூப்பர் ஸ்டாருக்கு பதிலடி கொடுக்க தயாராகும் தளபதி... லியோ ஆடியோ வெளியீட்டில் கலந்து கொள்வாரா சூப்பர் ஸ்டார்.?.!
தமிழ் சினிமாவில் இரு பெரும் நட்சத்திரங்களாக இருப்பவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தளபதி விஜய். ஒரு காலத்தில் தலைவர் ரஜினிகாந்தின் ரசிகராக இருந்தவர் தான் விஜய்.. ஆனால் இன்று ரஜினியின் இடத்திற்கு போட்டி போடும் அளவிற்கு சூப்பர் ஸ்டாராக வளர்ந்து இருக்கிறார்.
இந்நிலையில் ரஜினி மற்றும் விஜய் ஆகியோருக்கு இடையேயான போட்டி ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியிட்டின் போதே தெரிந்தது. ஜெயிலர் திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழா மேடையில் ரஜினி கழுகு, காக்கா கதை கூறினார். தற்போது செப்டம்பர் 30ஆம் தேதி லியோ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற இருக்கும் நிலையில் தளபதி விஜய் அதற்காக ஒரு குட்டி கதையை பட்டை தீட்டி வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.