அடஅட. என்னா ஆட்டம்! கணவருடன் வேற லெவல் பண்ணும் தாமரை! இந்த வீடியோவை பார்த்தீங்களா!!
அடஅட. என்னா ஆட்டம்! கணவருடன் வேற லெவல் பண்ணும் தாமரை! இந்த வீடியோவை பார்த்தீங்களா!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய மக்களிடையே அமோக வரவேற்பை பெற்று பிரபலமடைந்த பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அசத்தலாக விளையாடி மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் தாமரை. நாடகக் கலைஞரான அவர் ஆரம்பத்தில் விளையாட்டு புரியாமல் இருந்த நிலையில் பின்னர் அனைத்தையும் நன்றாக தெரிந்து கொண்டு டஃப் போட்டியாளராக மாறினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தாமரைக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். அதைத்தொடர்ந்து அவர் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பான பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். மேலும் தாமரை தற்போது தனது கணவர் பார்த்தசாரதியுடன் ஜோடியாக இணைந்து பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார்.
இதற்கிடையில் அவர் அவ்வப்போது சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக உள்ளார். மேலும் அவர் அடிக்கடி ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அவருக்கு என ஏராளமான பாலோவர்ஸ்கள் உள்ளனர். இந்த நிலையில் அண்மையில் தாமரை தனது கணவருடன் ‘அடியே ஒத்த தாமரை’ என்ற பாடலுக்கு டான்ஸ் ஆடியுள்ளார். அந்த வீடியோவை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட நிலையில் அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.