தனி ஒருவன் இரண்டாம் பாகத்தில் வில்லன் பகத்பாசிலா.? வெளியான தகவலால் ரசிகர்கள் கொண்டாட்டம்.!
வில்லன் பகத்பாசிலா.? வெளியான தகவலால் ரசிகர்கள் கொண்டாட்டம்.!
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில், ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த் சாமி ஆகியோர் நடித்து வெளிவந்த படம் 'தனி ஒருவன்'. ஜெயம் ரவி மிடுக்கான, அழுத்தமான போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.
ஸ்டைலிஷ் வில்லனாக 'சித்தார்த் அபிமன்யு' என்ற கேரக்டரில் அரவிந்த் சாமி நடித்திருந்தார். நீண்ட வருடங்களுக்குப் பிறகு கம் பேக் கொடுத்த அரவிந்த் சாமிக்கு இப்படம் மிகவும் பெயர் பெற்று தந்தது.
தொடர்ந்து ரீமேக் படங்களையே இயக்கி வருகிறார் என்ற குற்றச்சாட்டுக்கு, தனி ஒருவன் படத்தின் மூலம் முற்றுப்புள்ளி வைத்தார் இயக்குனர் மோகன் ராஜா. இந்நிலையில், தனி ஒருவன்-2 படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஹீரோ, ஹீரோயினாக இதிலும் ஜெயம் ரவி, நயன்தாரா நடிக்க உள்ளதாகவும், வில்லனாக பகத் பாசில் நடிக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. தனி ஒருவன் படத்தின் 8ம் ஆண்டு கொண்டாட்டத்தின் போது, தனி ஒருவன்-2 படத்தின் அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.