தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வரும் திமிரு பட நடிகர்.. இளைஞருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் கைதாகி இருக்கிறாரா.?
தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வரும் திமிரு பட நடிகர்.. இளைஞருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் கைதாகி இருக்கிறாரா.?
மலையாள திரையுலகில் பிரபலமான வில்லன் நடிகராக இருப்பவர் விநாயகன். இவர் மலையாளத்தில சில திரைப்படங்களில் கதாநாயகனாகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். இருந்தபோதிலும் வில்லனாகவே இவர் பிரபலம் அடைந்தார்.
மேலும் தமிழ் சினிமாவில் முதன்முதலில் விஷால் நடிப்பில் வெளியான 'திமிரு' திரைப்படத்தில் வில்லனாக நடித்து தமிழில் பிரபலமாக இருக்கிறார். இப்படிக்குப் பிறகு சிலம்பாட்டம், எல்லாம் அவன் செயல், போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார் விநாயகன்.
இது போன்ற நிலையில், வில்லன் நடிகர் விநாயகன் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். 2019 ஆம் வருடம் இளம்பெண் ஒருவர் பாலியல் தொல்லை செய்ததாக இவர் மீது புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இது குறித்து பல பேட்டிகளில் சர்ச்சையை கிளப்பும் விதமாக விநாயகன் பேசிய வீடியோ வைரலானது.
இந்நிலையில் தற்போது விமான நிலையத்தில் இளைஞர் ஒருவரை பாலியல்ரீதியாக தொல்லை செய்து வருகிறார் விநாயகன். இது குறித்து அந்த இளைஞர் விமான நிலைய நிறுவனத்திடம் புகார் அளித்துள்ளார். அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தற்போது உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார். இவ்வழக்கு சம்மந்தமான விசாரணை நடைபெற்று வருகிறது. இச்செய்தி இணையத்தில் வைரலாகி விநாயகனை நெட்டிசன்கள் திட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.