கண்பாஷை பேசி, பழைய ரணங்களை மறக்கும் தனுஷ்.. திருச்சிற்றம்பலம் Sneakpeak வெளியீடு..!!
கண்பாஷை பேசி, பழைய ரணங்களை மறக்கும் தனுஷ்.. திருச்சிற்றம்பலம் Sneakpeak வெளியீடு..!!
இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "திருச்சிற்றம்பலம்". இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது.
படம் வரும் ஆகஸ்ட் மாதம் 18-ம் தேதி உலகம் முழுவதுமுள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தில் ராஷிகண்ணா, பிரியா பவானி சங்கர், நித்யா மேனன் மற்றும் பிரகாஷ்ராஜ் உட்பட பல திரையுலக நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.
சமீபத்தில் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியின் அரங்கில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தில் Sneakpeak காட்சிகளை வெளியிட்டுள்ளது. அதில் மேகம் கருக்குதா பாடலில் தனுஷ் தனது காதலை வெளிப்படுத்தும் வகையில் பாடல் பாடியுள்ள காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.