இன்று பிறந்தநாள் கொண்டாடும் த்ரிஷா! தற்போது என்ன வயது தெரியுமா? இதோ!
Thrisha celebrating her 37th birthday
தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை த்ரிஷா. ஜோடி திரைப்படத்தில் சிறு வேடத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் இன்று தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலமாக உள்ளார். ரஜினி, கமல், விஜய், அஜித் என தமிழ் சினிமாவின் அணைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார் த்ரிஷா.
கில்லி, சாமி, திருப்பாச்சி, விண்ணை தாண்டி வருவாயா போன்ற இவரது படங்கள் ரசிகர்களின் பேராதரவை பெற்று மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. ஆடல், பாடல், கவர்ச்சி இவற்றை தாண்டி நடிப்புக்கு முக்கியத்துவம் தரும் படங்களை தேர்வு செய்து நடிக்க தொடங்கிவிட்டார் த்ரிஷா. சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இந்நிலையில் மே 4 1983 ஆம் ஆண்டு பிறந்த த்ரிஷா இன்று தனது 37 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் தனது பள்ளி படிப்பை சென்னையில் உள்ள சேக்ரட் ஹார்ட் பள்ளியிலும், கல்லூரி படிப்பை எத்திராஜ் கல்லூரியும் முடித்துள்ளார்.
தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்துவரும் த்ரிஷா தனது சினிமா பயணத்தில் மேலும் பல சாதனைகள் படைக்கவும், நீண்ட ஆயிளுடன் வாழவும் தமிழ் ஸ்பார்க் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம்.