"மரம் நடும் பணியே மாபெரும் அறம்".. 30 ஆயிரம் மரங்களுக்கு இலக்கு: விவேக் பாணியில் களமிறங்கிய நகைசுவை நடிகர் தங்கதுரை..!
மரம் நடும் பணியே மாபெரும் அறம்.. 30 ஆயிரம் மரங்களுக்கு இலக்கு: விவேக் பாணியில் களமிறங்கிய நகைசுவை நடிகர் தங்கதுரை..!
மறைந்த நடிகர் விவேக், அப்துல் கலாமின் ஆசையை நினைவேற்றும் பொருட்டு தொடர்ந்து மரக்கன்றுகளை நட்டு வந்தார். இதற்காக பிரத்தியேக நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்திருந்தார்.
அவரின் மறைவுக்கு பின்னர் தற்போது வரை பெருமளவு மரங்கள் யாராலும் நடப்படவில்லை. அவரின் முயற்சியை முன்னெடுக்கவும் இல்லை. சமீபத்தில் புத்தாண்டை முன்னிட்டு நடிகர் சந்தானம் தனது வீட்டில் மரக்கன்று ஒன்றை நட்டுவைத்து, புத்தாண்டில் அடியெடுத்து வைத்தார்.
இந்நிலையில், சின்னத்திரை வாயிலாக வெள்ளித்திரைக்கு அறிமுகமான நகைச்சுவை நடிகர் தங்கதுரை, பசுமை நாயகன் என்று போற்றப்பட்ட விவேக்கின் மரம் வளர்ப்பை கையில் எடுத்துள்ளார்.
நடப்பு ஆண்டில் குறைந்தபட்சம் 30 ஆயிரம் மரக்கன்றுகளை நடவும் அவர் திட்டமிட்டு இருக்கிறார். இதன் முதல் படியாக, பல திரையுலக நட்சத்திரங்களிடமும் மரக்கன்றுகளை வழங்கி வருகிறார்.
தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் மற்றும் உச்ச நட்சத்திரம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திடம் நேரில் இந்த விஷத்தை தெரிவித்து, அவரிடம் மரக்கன்று வழங்கி ஆசி வாங்கி செயலை தொடங்கினார்.