வருங்கால கணவரை குறித்து மனம் திறந்த திரிஷா.! வைரலாகும் வீடியோ.?
வருங்கால கணவரை குறித்து மனம் திறந்த திரிஷா.! வைரலாகும் வீடியோ.?
மாடலழகியும், நடிகையுமான த்ரிஷா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தனது நடிப்பு திறமையாலும், அழகாலும் ரசிகர்களின் மனதை கவர்ந்து தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்துள்ளார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் மிகப்பெரும் வெற்றி அடைந்தது. இப்படத்திற்கு பின்பு பல திரைப்படங்களில் நடிப்பதற்கு கம்மிட்டான திரிஷா, தற்போது விஜய் நடிப்பில் 'லியோ' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இது போன்ற நிலையில், த்ரிஷா சமீபத்தில் அளித்த பேட்டி வைரலாகி வருகிறது. அதில் அவரது திருமணத்தை குறித்து பேசியிருக்கிறார். திரிஷா கூறியதாவது, "திருமணம் செய்து கொண்ட விவாகரத்து பெறுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. நான் எதிர்பார்க்கும் படி ஒரு ஆள் கிடைக்கும் போது கண்டிப்பாக திருமணம் செய்வேன். திருமணம் செய்தாலும் தொடர்ந்து சினிமாவில் நடித்துக் கொண்டுதான் இருப்பேன்.
மேலும் அஜித் மாதிரி ஒரு கணவன் கிடைப்பதற்கு ஆசைப்படுகிறேன். அவர் அப்பாவாகவும், கணவராகவும் தனது கடமையை சரியாக செய்து வருகிறார். அவரை போல் கணவன் கிடைப்பதற்கு எந்த பெண்ணிற்கு தான் ஆசை இருக்காது" என்று பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார்.