மாமன்னன் படத்தின் 50-வது நாள் கொண்டாட்டமே இறுதி திரைமேடை - மனம்திறந்த உதயநிதி ஸ்டாலின்; அதிகாரபூர்வ அறிவிப்பு.!
மாமன்னன் படத்தின் 50-வது நாள் கொண்டாட்டமே இறுதி திரைமேடை - மனம்திறந்த உதயநிதி ஸ்டாலின்; அதிகாரபூர்வ அறிவிப்பு.!
உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், வடிவேல் உட்பட பலரின் நடிப்பில் வெளியான திரைப்படம் மாமன்னன். இந்த திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கி இருந்தார். ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்து வழங்கியது.
கடந்த ஜூன் 30ம் தேதி உலகெங்கும் திரையரங்கில் வெளியான திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது. நடிகர்கள் ரஜினிகாந்த், தனுஷ் உட்பட பலரும் மாமன்னன் திரைப்படத்தை பார்த்துவிட்டு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
திரைப்படத்திற்கு கிடைத்த நல்ல வரவேற்பை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் மாரி செல்வராஜுக்கு கார் ஒன்றையும் பரிசாக வழங்கினார். இந்த நிலையில், மாமன்னன் தனது இறுதி படம் என்பதை உதயநிதி ஸ்டாலின் உறுதி செய்துள்ளார்.
அதாவது, நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசுகையில், "மாமன்னன் திரைப்படத்தின் 50வது நாள் தான் எனது திரைத்துறை பயணத்தின் இறுதி நாளாக இருக்கும். அதுவே திரைத்துறையில் எனது இறுதி மேடை" என கூறினார்.