என்னது.. இது வேற லெவலாச்சே! சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேரும் வெளிநாட்டு நடிகை! யார்னு பார்த்தீங்களா!!
என்னது.. இது வேற லெவலாச்சே! சிவகார்த்திகேயனுக்கு ஜோடி சேரும் வெளிநாட்டு நடிகை! யார்னு பார்த்தீங்களா!!
தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடிகட்டி பறப்பவர் சிவகார்த்திகேயன். இவரது படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு இருக்கும். சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டான் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
மேலும் ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது. அதனைத் தொடர்ந்து அவர் தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் SK20 என்ற படத்தில் நடிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகவுள்ள இப்படத்துக்கு தமன் இசையமைக்கிறார்.
இதன் படப்பிடிப்பு காரைக்குடியில் அண்மையில் பூஜையுடன் தொடங்கியது. இந்நிலையில் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நடிகையான மரியா ரியாபோஷாப்கா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இவர் 2018-ஆம் ஆண்டு வெளிவந்த ‘எடெர்’ என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான ‘ஸ்பெஷல் ஆப்ஸ்’ என்ற இந்தி வெப் தொடரிலும் நடித்துள்ளார். ஆனால் அவர் சிவகார்த்திகேயனுடன் நடிப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை.