ஊரடங்கை மீறி ஹெலிகாப்டரில் பயணம் செய்து சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகர்.!
Uradankai miri helicoptaril sinra actre akshi kumar
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராகவும், அதிகப்பட்ச ரசிகர்கள் பட்டாளத்தையும் கொண்டவர் நடிகர் அக்சய் குமார். இவர் இந்தியில் பல வெற்றி படங்களை கொடுத்து மக்கள் மத்தியில் பிரபலமானவர்.
நடிகர் அக்சய் குமார் தமிழில் பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான 2.0 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானவர். இந்நிலையில் தற்போது இந்தியா முழுவதும் வேகமாக பரவி கொரோனா பாதிப்பு காரணமாக நடிகர், நடிகைகள் அனைவரும் படப்பிடிப்பின்றி தங்களது வீட்டிலேயே இருந்து வருகின்றனர்.
ஆனால் நடிகர் அக்சய் குமார் ஊரடங்கை மீறி சிறப்பு அனுமதி பெற்று டாக்டரை சந்திக்க ஹெலிகாப்டரில் மும்பையில் இருக்கும் நாசிக்கிற்கு சென்றுள்ளார். கொரோனா ஊரடங்கு சமயத்தில் நடிகர் அக்சய் குமாருக்கு மட்டும் ஹெலிகாப்டரில் செல்ல சிறப்பு அனுமதி அளித்தது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.