அஜித்தின் வலிமை! அசத்தலான அப்டேட்டை வெளியிட்ட தயாரிப்பாளர் போனிகபூர்! உற்சாகத்தில் ரசிகர்கள்!!
அஜித்தின் வலிமை! அசத்தலான அப்டேட்டை வெளியிட்ட தயாரிப்பாளர் போனிகபூர்! உற்சாகத்தில் ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்குமார் ஹெச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தில் ஹீமா குரேஷி, கார்த்திகேயா, சுசித்ரா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா அசத்தலாக இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் ஒவ்வொரு அப்டேட்டிற்காகவும் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். இந்தநிலையில் அண்மையில் வலிமை படத்தின் டிரைலர் வெளியாகி பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது. இப்படத்தில் பைக் சேசிங் காட்சிகள் அனைத்தும் செம்ம மாஸாக இருந்தது.
அதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடினர். மேலும் வலிமை படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என தகவல்கள் வெளிவந்தது. இந்த நிலையில் தற்போது தயாரிப்பாளர் போனி கபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் வலிமை படத்தின் டீஸரை பகிர்ந்து வலிமை திரைப்படம் வரும் ஜனவரி 13ம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகும் என தெரிவித்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.