என்னது.. இப்போ இல்லையா! ஒத்த அறிவிப்பால் செம ஏமாற்றத்தில் அஜித் ரசிகர்கள்!!
என்னது.. இப்போ இல்லையா! ஒத்த அறிவிப்பால் செம ஏமாற்றத்தில் அஜித் ரசிகர்கள்!!
ஹெச்.வினோத் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வலிமை’. இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். மேலும் இப்படத்தில் ஹியூமா குரேஷி, கார்த்திகேயா, சுசித்ரா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் வலிமை படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.
மேலும் படம் வரும் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பெருமளவில் பரவி வரும் நிலையில் தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் பொங்கலை முன்னிட்டு ரிலீஸாக இருந்த ராஜமௌலியின் ‘ஆர்ஆர்ஆர்’, பிரபாஸ் நடித்த ‘ராதே ஷ்யாம்’ போன்ற படங்களின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது கொரனோ பரவி வருவதால், ரசிகர்களின் நலன் கருதி வலிமை படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படுவதாக தயாரிப்பாளர் போனி கபூர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால் அஜித் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.