வல்லான் திரைப்படத்துக்கு யுஏ சான்றிதழ்; தணிக்கைக்குழு அறிவிப்பு.!
வல்லான் திரைப்படத்துக்கு யுஏ சான்றிதழ்; தணிக்கைக்குழு அறிவிப்பு.!

வி.ஆர். மணி சேயோன் இயக்கத்தில், நடிகர்கள் சுந்தர் சி, தன்யா ஹாப், ஹெபாக் படேல், கமல் காமராஜ், அபிராமி வெங்கடாசலம், சாந்தினி தமிழரசன், தலைவாசல் விஜய், ஜெயக்குமார் உட்பட பல நடிக்க உருவாகியுள்ள திரைப்படம் வல்லான்.
விஆர் டெல்லா பிலிம் பேக்டரி தயாரிப்பில், மணி பெருமாள் ஒளிப்பதிவில், சந்தோஷ் தயாநிதி இசையில், தினேஷ் பொன்ராஜ் எடிட்டிங்கில் உருவாகியுள்ள திரைப்படம், வரும் ஜனவரி மாதம் 24 ம் தேதி அன்று வெளியாகிறது.
இதையும் படிங்க: சுந்தர் சியின் வல்லான் திரைப்படம்; ட்ரைலர், வெளியீடு தேதி அறிவிப்பு.. லிங்க் உள்ளே.!
சமீபத்தில் இயக்குனர் சுந்தர் சி யின் மதகஜராஜா திரைப்படம் 10 ஆண்டுகளுக்கு பின்னர் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றியை அடைந்தது.
இதனிடையே, ஜனவரி 24ம் தேதி வெளியாகவுள்ள வல்லான் படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது. அதனைத்தொடர்ந்து, படத்திற்கு சென்சார் குழு யுஏ சான்றிதழ் வழங்கி இருக்கிறது.
வல்லான் ட்ரைலர்
இதையும் படிங்க: "என் வீட்டுக்காரருக்கு சுத்திப்போடணும்" - மதகஜராஜா ரிலீஸ் குறித்து குஷ்பூ நெகிழ்ச்சி பேட்டி.!