ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சிய வாணி போஜன்.. வைரலாகும் புகைப்படம்.!
ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சிய வாணி போஜன்.. வைரலாகும் புகைப்படம்.!
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிரபலமான சீரியலின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் வாணி போஜன். சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு தனது விடாமுயற்சியினாலும், நடிப்பு திறமையினாலும் கதாநாயகியாக காலடியேடுத்து வைத்தார்.
சின்ன திரையில் இவரது நடிப்பின் மூலம் சின்னத்திரை நயன்தாரா எனும் பெயர் பெற்றிருந்தார் வாணி போஜன். மேலும் முதன் முதலில் ' ஓ மை கடவுளே' என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் இவரின் நடிப்பு பாராட்டப்பட்டது.
இப்படத்திற்கு பின்பு அடுத்தடுத்த திரைப்படங்கள் ஒப்பந்தமாகிய வாணி போஜன் வெள்ளி திரையில் பிஸியான நடிகையாக வலம் வந்தார். ஆனால் இவர் நடித்த திரைப்படங்கள் எதுவும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வெற்றி பெறவில்லை என்பதால் இவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கின.
தற்போது பட வாய்ப்புக்காக போட்டோ சூட் செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார் வாணி போஜன். அவ்வாறு ஹாலிவுட் நடிகைகளே மிஞ்சும் அளவிற்கு போஸ் கொடுத்து போட்டோ சூட் செய்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியமுடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.