அடக்கொடுமையே! காதல் கணவர் பீட்டர் பாலை விரட்டியடித்தாரா வனிதா! பிரபலம் வெளியிட்ட தகவலால் ஷாக்கான நெட்டிசன்கள்!
வனிதா, தனது கணவர் பீட்டர் பாலுடன் தகராறு ஏற்பட்டநிலையில் அவரை விரட்டியடித்ததாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
நடிகர் விஜயகுமாரின் மூத்த மகள் வனிதா. கணவரை விவாகரத்து செய்து தனது இரு மகள்களுடன் தனியாக வாழ்ந்து வந்த அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து அவர் பல சர்ச்சைகளை சந்தித்தார். மேலும் நெட்டிசன்கள் மற்றும் பிரபலங்கள் சிலரும் அவரது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மோசமாக விமர்சனம் செய்தனர்.
ஆனால் எதற்கும் அசராமல் தன்னைக் குறித்து தவறாக பேசுபவர்களுக்கு பதிலளித்து வந்த வனிதா தற்போது தனது சமையலுக்கான யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். மேலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் வனிதா தனது பிறந்தநாளை கொண்டாட காதல் கணவர் மற்றும் மகள்களுடன் கோவாவிற்கு சென்றார். அங்கு மிகவும் ஜாலியாக நேரத்தை செலவிட்டு வந்த அவர்கள் அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்தனர்.
மேலும் இதனை கண்ட நெட்டிசன்கள் வயதுக்கு வந்த பெண்ணை வைத்துக் கொண்டு இப்படியெல்லாம் ரொமான்ஸ் தேவையா என விமர்சனம் செய்து வந்தனர். இந்த நிலையில் கோவாவிலிருந்து திரும்பும்போது பீட்டர் பால் குடிபோதையில் தகராறு செய்ததாகவும், அதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் வனிதா அவரை அடித்து காரில் இருந்து தள்ளிவிட்டு வந்ததாகவும் தகவல்கள் பரவி வருகிறது.
இதுகுறித்த செய்திகள் பரவியநிலையில் அது உண்மைதான் என்பது போல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இவர் ஆரம்பத்தில் இருந்தே வனிதா மற்றும் பீட்டர் பால் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.