"ட்விட்டரில் கமலை கழுவி ஊத்துறாங்க" "ரவீணா - மணிக்கு இது பெயிட் ஹனிமூன்!" வனிதா விஜயகுமார் காட்டம்!
ட்விட்டரில் கமலை கழுவி ஊத்துறாங்க ரவீணா - மணிக்கு இது பெயிட் ஹனிமூன்! வனிதா விஜயகுமார் காட்டம்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சி பிக் பாஸ். இது தற்போது ஆறு சீசன்களை வெற்றிகரமாக கடந்து தற்போது ஏழாவது சீசன் ஒளிபரப்பாக உள்ளது. தற்போது இந்த சீசனில் 75 நாட்களைத் தாண்டி நிகழ்ச்சி ஒளிபரப்பாகி உள்ளது.
மற்ற சீசன்களை விட இந்த சீசனில் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்தே சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லாமல் உள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார் முன்னாள் சீசன் போட்டியாளரான வனிதா.
அவர், "சீசன் 3ல் எனக்கு 'வத்திக்குச்சி' என்று பட்டப்பெயர் வைத்து அழைத்தார்கள். அப்போது கமலே கூட என்னை இரண்டு முறை வத்திக்குச்சி என்று அழைத்துள்ளார். ஆனால் இந்த சீசனில் மட்டும் பட்டப்பெயர் வைத்து அழைப்பது தப்பு என்று ஏன் சொல்கிறார்?
தெலுங்கில் நாகார்ஜுனா அவ்வளவு அழகாக நிகழ்ச்சியைக் கொண்டு செல்கிறார். ஆனால் இங்கு ட்விட்டர் போனாலே கமலை கழுவி ஊத்துறாங்க. இந்த சீசனில் ரவீணா - மணிக்கு இது பெயிட் ஹனிமூன் போல ஜாலியாக இருக்கிறார்கள்" என்று காட்டமாக கூறியுள்ளார் வனிதா.