வாவ்.. கெத்து காட்டுறாரே.! நியூ ஹேர்ஸ்டைலில் செம ஸ்டைலாக மாஸ் காட்டும் வனிதா.! வைரலாகும் புகைப்படங்கள்.!!
வாவ்.. கெத்து காட்டுறாரே.! நியூ ஹேர்ஸ்டைலில் செம ஸ்டைலாக மாஸ் காட்டும் வனிதா.! வைரலாகும் புகைப்படங்கள்.!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக நட்சத்திரமாக வலம் வந்த விஜயகுமார் - மஞ்சுளா தம்பதியரின் மகள் வனிதா விஜயகுமார். அவர் தளபதி விஜய்யுடன் இணைந்து சந்திரலேகா என்ற படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் அவர் பெருமளவில் படங்களில் நடிக்கவில்லை.
சர்ச்சைகளுக்கு பெயர் போன அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பல விமர்சனங்களை சந்தித்து பெருமளவில் பிரபலமானார். பின்னர் மூன்றாவது திருமணம், விவாகரத்து என சமூக வலைத்தளத்தில் பேசுபொருளாக இருந்த அவர் எதனையும் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து படங்கள், பிசினஸ் என பிசியாக இருந்து வருகிறார்.
மேலும் அவர் சமூக வலைதளங்களிலும் ஆகட்டிவாக இருந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் செம பிஸியாக இருக்கும் வனிதா தற்போது தனது ஹேர் ஸ்டைலை மாற்றியுள்ளார். அந்தப் புகைப்படங்களை அவர் இணையத்தில் பகிர்ந்த நிலையில், அது வைரலாகி வருகிறது.