திடீரென அந்த மதத்திற்கு மாறியது இதனால்தான்! சீக்ரெட்டை போட்டுடைத்த நடிகை வனிதா!
திடீரென அந்த மதத்திற்கு மாறியது இதனால்தான்! சீக்ரெட்டை போட்டுடைத்த நடிகை வனிதா!
தமிழ் சினிமாவில் சந்திரலேகா என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் வனிதா. அதனை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்துள்ள அவர் பிரபல நட்சத்திரங்களான விஜயகுமார்- மஞ்சுளாவின் மூத்த மகள் ஆவார். சர்ச்சைக்கு பெயர் போன அவர் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பெருமளவில் பிரபலமானார்.
இதனையடுத்து வனிதா விஜயகுமார் பீட்டர்பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டு பெரும் சர்ச்சைக்கு ஆளானார். பின்னர் இருவரும் மூன்று மாதங்களிலேயே பிரிந்தனர். இந்த நிலையில் அவர் சமூக வலைதளங்களில் பேச்சுப்பொருளானார். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் வனிதா யூடியூப், சின்னத்திரை, வெள்ளித்திரை, சமூக வலைதளங்கள் என பிஸியாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராமில், தான் பின்பற்றும் மதம் குறித்து பதிவிட்டுள்ளார். அதில் அவர், சந்தோஷமான, மகிழ்ச்சியான வாழ்க்கைக்காக நான் சில வருடங்களுக்கு முன்பே புத்த மதத்தை பின்பற்றினேன். அதற்கு பின் அதைப்பற்றி மறுபரிசீலனை செய்ய எதுவும் இல்லை என பதிவிட்டுள்ளார். மேலும் புத்திசம், கோவில் பயணம் போன்ற ஹாஷ்டேக்குகளையும் பதிவிட்டுள்ளார்.