மீண்டும் பரபரப்பு! 1.25 கோடி கேட்ட லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு, வனிதா அனுப்பிய நோட்டீஸ்! நஷ்ட ஈடாக எவ்வளவு கேட்டுள்ளார் பார்த்தீர்களா!
Vanitha send legal notice to lakshmi ramakrishnan
நடிகை வனிதா சில மாதங்களுக்கு முன்பு பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். அதனை தொடர்ந்து அவர் நெட்டிசன்களால் மோசமாக விமர்சனம் செய்யப்பட்டு சமூகவலைத்தளங்களில் பேசுபொருளானார். இந்நிலையில் பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன்க்கு ஆதரவாகவும், நடிகை வனிதாவிற்கு எதிராகவும் சூர்யா தேவி என்ற பெண், நடிகை கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் தயாரிப்பாளர் ரவீந்தர் உள்ளிட்ட பலரும் கருத்துகளை கூறி வந்தனர்.
இதற்கிடையில் யூடியூப் சேனல் ஒன்றில் வனிதா மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் இருவருக்குமிடையே நடைபெற்ற பேட்டியில், வனிதா கோபமடைந்து லட்சுமி ராமகிருஷ்ணனை வாடி, போடி என மரியாதை குறைவதாகவும், அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவதூறாகவும் பேசினார். இந்நிலையில் பேட்டியிலிருந்து பாதியிலேயே சென்ற லக்ஷ்மி ராமகிருஷ்ணன், அதனை தொடர்ந்து தன்னை குறித்து அவதூறாக பேசிய வனிதாவுக்கு ரூ. 1.25 கோடி மானநஷ்ட ஈடு கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். அதனை வனிதாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது வனிதாவும், லட்சுமி ராமகிருஷ்ணன் தன்னை அவதூறாக பேசி தனது பெயரை கெடுத்ததாக ரூ. 2.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு லக்ஷ்மி ராமகிருஷ்ணனுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனால் மீண்டும் பரபரப்பு கிளம்பியுள்ளது.