ஷட்டப் ராஸ்கல்.. எடக்குமடக்காக கேள்வி கேட்ட பிரபல நடிகர்! வெளுத்து வாங்கிய நடிகை வரலக்ஷ்மி!!
varalakshmi answered to sandeep kishan
தமிழ் சினிமாவில் போடா போடி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார் நடிகை வரலக்ஷ்மி. அவர் பிரபல தென்னிந்திய நடிகரான சரத்குமாரின் மகளாவார். இதனை தொடர்ந்து வரலக்ஷ்மி தாரை தப்பட்டை, விக்ரம் வேதா போன்ற படங்களில் நடித்தார்.
அதனை தொடர்ந்து வில்லியாக புதிய அவதாரம் எடுத்த அவர் சண்டகோழி 2, சர்கார் பிற படங்களில் வில்லியாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து அவர் வீரக்குமார் இயக்கத்தில் ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகி வரும் சேஸிங் என்ற தமிழ்படத்தில் நடித்து வருகிறார். மேலும் நடிகை வரலக்ஷ்மி தமிழ்சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், மற்றும் கன்னடம் போன்ற பல்வேறு மொழிகளிலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் வரலக்ஷ்மி தற்போது தெனாலி ராமகிருஷ்ணா பி.ஏ.பி.எல் என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் அப்படத்தில் அவருடன் இணைந்து ஹன்சிகா மோட்வானி மற்றும் மாநகரம் பட நடிகர் சந்தீப் கிஷன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் சந்தீப் கிஷன் அவரது ட்விட்டர் பக்கத்தில் வரலட்சுமியிடம், நீங்கள் எப்போதும் பார்ப்பதற்கு டான் மாதிரியே இருக்கிறீங்களே! எப்படி என்று கேட்டுள்ளார். இதற்கு வரலட்சுமி ஹாஹா... ஷட்டப் ராஸ்கல் lol ' என்று பதிலளித்துள்ளார்.