அதிமுகவை முட்டாள் என கூறிய வரலட்சுமி!. கோவத்தில் அதிமுகவை வெளுத்துவாங்கி பரபரப்பு பேச்சு!.
varalakshmi talking angry about ADMK
சர்கார் படத்தின் போஸ்டர்கள் வெளியானதிலிருந்தே பிரச்சனைகள் தொடங்கிவிட்டது. விஜய் புகைபிடிப்பதை ஊக்குவிப்பதாக எதிர்ப்புகள் கிளம்பின. பின்னர் படங்கள் இணையத்தில் இருந்து நீக்கப்பட்டது.
இந்நிலையில் தீபாவளி அன்று வெளியான சர்க்கார் படம் ஆளும் கட்சியை மிகவும் விமர்சிப்பதாக எதிர்ப்புகள் கிளம்பின. தமிழக அரசியல் பிரமுகர்கள் குறிப்பாக ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் படத்திற்கு எதிராக போர் கொடி தூக்கினர்.
சர்கார் படத்தில் வரலட்சுமி கதாபாத்திரத்தின் பெயர் மற்றும் இலவசமாகி வழங்கிய பொருட்களை தீயிட்டுக் கொளுத்துவது போன்ற காட்சிகளுக்குத் தான் அதிமுக கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால், தற்போது வரலட்சுமி கதாபாத்திரத்தின் கோமளவள்ளி என்ற பெயரை ம்யூட் செய்யப்பட்டு இருக்கிறது. மேலும், குறித்த காட்சிகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், சர்கார் சர்ச்சை குறித்து அந்தப் படத்தில் வில்லியாக நடித்திருக்கும் வரலட்சுமி சரத்குமார், "ஒரு படத்தைப் பார்த்து பயப்படும் அளவுக்கா இந்த அரசாங்கம் வலுவற்றதாக இருக்கிறது? நீங்களே உங்கள் நற்பெயரைக் கெடுத்துக் கொள்கிறீர்கள்.
எதைச் செய்யக்கூடாதோ அதையே செய்து கொண்டிருக்கிறீர்கள். தயவுசெய்து இத்தகைய முட்டாள்தனத்தை நிறுத்துங்கள். படைப்பாற்றலின் சுதந்திரத்தைப் பறிக்காதீர்கள்" என ட்வீட் செய்துள்ளார்.