ஜோடியாக டூயட் பாடும் விஜய்-ராஷ்மிகா.! தீயாய் பரவும் வாரிசு பட ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ.! இதோ...
டூயட் பாடும் விஜய்-ராஷ்மிகா.! தீயாய் பரவும் வாரிசு பட ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ.!
தமிழ் சினிமாவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் தனது 66வது படமான வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ளது. இதனை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் நிறுவன தயாரிக்கிறது.
வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா மற்றும் அவர்களுடன் சரத்குமார், ஷாம், பிரகாஷ் ராஜ், பிரபு, குஷ்பு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். வாரிசு படம் 2023 ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வாரிசு படத்தை ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் படப்பிடிப்புதள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் தற்போது படத்தில் விஜய் மற்றும் ராஷ்மிகா டூயட் ஆடும் பாடல் காட்சியின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்று லீக்காகி சமூக வலைத்தளங்களில் பெருமளவில் வைரலாகி வருகிறது.