மருத்துவமனையில் பதறியடித்து ஓடிய தளபதி விஜய் மற்றும் பிரபு! யாருக்கு என்னாச்சு?? வைரல் வீடியோ!!
மருத்துவமனையில் பதறியடித்து ஓடும் தளபதி விஜய், பிரபு! யாருக்கு என்னாச்சு.! வைரல் வீடியோ!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜய் பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வம்சி இயக்குகிறார். பிரபல தெலுங்கு இயக்குனரான வம்சி தமிழில் தோழா படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகா நடிக்கிறார்.
மேலும் வில்லனாக பிரகாஷ் ராஜ் நடிக்கிறார். ஷியாம், சரத்குமார், சம்யுக்தா, பிரபு, குஷ்பு, யோகிபாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். படத்தை 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் வாரிசு இறுதிகட்ட படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் படப்பிடிப்பு தளத்திலிருந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி வருகிறது. அவ்வாறு தற்போதும் வீடியோ ஒன்று வெளிவந்து வைரலாகி வருகிறது. அதில், உயிருக்கு போராடும் ஒருவரை ஸ்ட்ரெக்சரில் படுக்கவைத்து பதறியபடி விஜய் மற்றும் பிரபு தள்ளிச் செல்லும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.