17 வயதில் நிறைமாத கர்ப்பிணியான அஜித்தின் ரீல் மகள்! பகீர் கிளப்பிய புகைப்படம்!!
17 வயதில் நிறைமாத கர்ப்பிணியான அஜித்தின் ரீல் மகள்! பகீர் கிளப்பிய புகைப்படம்!!
தளபதி விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவின் தயாரிப்பில் உருவாகியுள்ள அடுத்த படத்திற்கு 'வாசுவின் கர்ப்பிணிகள்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஜீவி பிரகாஷ் நடித்த ’பென்சில்’ படத்தை இயக்கிய இயக்குனர் மணிநாகராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்திற்கு அவின் மோகன் சித்தாரா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் புதிய போஸ்டர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. விஸ்வாசம்’ படத்தில் அஜித் மகளாக நடித்த அனிகா சுரேந்திரன், வனிதா விஜயகுமார் மற்றும் சீதா ஆகியோர் நிறைமாத கர்ப்பிணியாக உள்ளது போல காண்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதில் விஜய் டிவி ’நீயா நானா’ கோபிநாத் மருத்துவராக நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் டெலிவரி என வெளியிடப்பட்டுள்ள இந்த போஸ்டரை கண்டு 17 வயதுமிக்க அனிகா நிறைமாத கர்ப்பிணியாக நடிக்கிறாரா? என நெட்டிசன்கள் ஷாக்காகியுள்ளனர். மேலும் சிலர் இந்த வயதில் இப்படியொரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததற்கு அவரை பாராட்டியும் வருகின்றனர்.