அவர் அப்படிபட்டவர்தான்.. குக் வித் கோமாளியிலிருந்து விலகிய மணிமேகலை.! செஃப் வெங்கடேஷ் பட் எமோஷனல் பதிவு.!!
குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகிய மணிமேகலை.! எமோஷனலாக செஃப் வெங்கட் பட் கூறியதை பார்த்தீங்களா.!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கலந்து வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. தற்போது 4வது சீசன் மிகவும் கலகலப்பாகவும், விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கோமாளிகள் செய்யும் அலப்பறைகள் சேட்டைகள் மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்.
இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு மக்களை கவர்ந்தவர் மணிமேகலை. அவர் அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இதுதான் எனது கடைசி எபிசோடு. 2019ஆம் ஆண்டு முதல் குக் வித் கோமாளியில் ரசிகர்கள் என் மீது அன்பை பொழிந்தீர்கள். உங்களுக்கெல்லாம் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். எனக்கு கொடுத்த வாய்ப்புகளை சிறப்பாக கொண்டு வர நான் முயற்சி செய்வேன். என அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் செஃப் வெங்கடேஷ் பட் இதுகுறித்து, மணிமேகலை ஒரு சிறந்த கோமாளி. நான் பார்த்த சிறந்த மனிதர்களில் ஒருவர். உங்களுடன் குக் வித் கோமாளி செட்டில் நான் அருமையான நேரத்தை செலவிட்டேன். எனது வாழ்க்கையில் அழகான நினைவுகளை உங்கள் மூலம் பெற்றேன். நீங்கள் எந்த துறைக்கு சென்றாலும் அங்கு ஜொலிக்க, சிகரத்தை அடைய இறைவனை வேண்டுகிறேன். இறைவன் எப்பொழுதும் உங்களை ஆசீர்வதிப்பார் என கூறியுள்ளார்.